Tuesday, May 21, 2019

குறள்: 7 கடவுள் வாழ்த்து/The Praise of God

பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:1.கடவுள் வாழ்த்து(Kadavul Vazhthu)

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

மு.வரதராசனார் உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைகின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. 

Section: Virtue
Chapter Group: Prologue
Chapter: The Praise of God
Couplet No.: 7

Transliteration:
Thanakkuvamai Illaathaan Thaalsernthaark Kallaal
Manakavalai Maatral Arithu.

Rev. Dr. G.U. Pope Translation:
Unless His foot, ‘to Whom none can compare,’ men gain,
‘Tis hard for mind to find relief from anxious pain.

Couplet Explanation:
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

No comments:

Post a Comment