Thursday, May 16, 2019

குறள்: 2 கடவுள் வாழ்த்து/The Praise of God

பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:1.கடவுள் வாழ்த்து(Kadavul Vazhthu)

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்.


மு.வரதராசனார் உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

Section: Virtue
Chapter Group: Prologue
Chapter: The Praise of God
Couplet No.: 2

Transliteration:
Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaar Enin.

Rev. Dr. G.U. Pope Translation:
No fruit have men of all their studied lore, save they 
the purely wise one's feet adore.

Couplet Explanation:
What profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

No comments:

Post a Comment