திருக்குறள் 2000
ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த திருவள்ளுவரால் இயற்றப்பட்ட நூல். இது சங்க இலக்கியங்கலான
பதினெண்கிழ்க்கணக்கு எனப்படும் 18 நூல்களில் ஒண்டாக கருதப்படுகிறது. இந்நூல் ஒரு வாழ்வியல்
நூலாகும்.
பாடல்கள் அனைத்தும் குறள்
வெண்பா வகையை சார்ந்தவை என்பதால் இது “குறள்” எனவும், இதன் உயர்வு கருதி “திரு”
என்ற அடைமொழியுடன் “திருக்குறள்” என்று அழைக்கப்படுகிறது.
அறத்துப்பால், பொருட்பால், காமத்துபால்
என மூன்று பிரிவுகள் கொண்டிருப்பதால் “முப்பால்” எனப்படுகிறது. இதுவே
திருக்குறளின் முதல் பெயராகும். அனைத்து குறள்களும் இரண்டு அடிகள் கொண்டு
இயற்றப்பட்டதனால் இது “ஈரடி நூல்” எனப்படுகிறது. இனம், மொழி, பாலிணம், காலம்
கடந்து அனைவருக்கும் பொருந்தும் நூலாக இருப்பதனால் இது “உலகப் பொதுமறை”
என்றழைக்கப்படுகிறது.
திருக்குறள் 13
இயல்களும், 133 அதிகாரமும், அதிகாரத்திக்கு 10 பாடல்கள் வீதம் 1330 குறட்பாகளையும்
கொண்டுள்ளது. அறத்துப்பால் 4 இயல்களும், 38 அதிகாரமும், அதிகாரத்திக்கு 10 பாடல்கள் வீதம் 380 குறட்பாகளையும் கொண்டது. பொருட்பால் 7 இயல்களும், 70 அதிகாரமும், அதிகாரத்திக்கு 10 பாடல்கள் வீதம்
700 குறட்பாகளையும் கொண்டது. காமத்துபால் 2 இயல்களும், 25 அதிகாரமும், அதிகாரத்திக்கு 10 பாடல்கள் வீதம்
250 குறட்பாகளையும் கொண்டது.
ஒவ்வொரு குறளும் 7 சீர்களை
கொண்டு இயற்றப்பட்டது. முதலடி 4 வார்த்தைகளும், இரண்டாமடி 3 வார்த்தைகளும்
கொண்டுள்ளன.
திருக்குறளுக்கு
வழங்கப்படும் பெயர்களானவை உத்திரவேதம், பொய்யாமொழி, வாயுரைவாழ்த்து, தெய்வநூல், பொதுமறை,
முப்பால், தமிழ்மறை, ஈரடி
நூல், வான்மறை.
Thirukkural
was authored by Thiruvalluvar. It was written 2000 years ago. Thirukurral is one among the Eighteen lesser texts. It is also known as "the Universal Veda" and "the
Universal Code of Conduct.
As it consists of 3 parts (books) (ie. Book of Virtue, Book
of Polity, Book of Love) this is also called as “Work of Three Books”
The
Kural is structured into 133 chapters, each containing 10 couplets (or kurals),
for a total of 1,330 Verses. The book on Aṟam (virtue)
contains 4 chapter groups, 38 chapters, with each 10 verses of total 380 couplets,
that of Poruḷ (wealth) has 7 chapter groups, 70 chapters, with each 10 verses
of total 700 couplets and that of Inbam or kāmam (love) has 2chapter groups, 25
chapters, with each 10 verses of total 250 couplets.
Thirukural is also
known as The Universal Veda, The
Universal Code of Conduct, Works of Three Books, Modern Veda, Tamil Veda, Divine
Work, and Faultless Word.
No comments:
Post a Comment